LYRIC

பாடல் : சிலு சிலு வென்று
பாடகர் : விஜய் யேசுதாஸ்
படம் : வனமகன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள் : மதன் கார்கீ

சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டு ஒன்று
கேளு கண்ணம்மா

அலை அலையாக ஆனந்தம்
தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா

மேல் கீழாக
அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டு
சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா

வானைத்தாங்கும்
மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு
செல்லக் கண்ணம்மா

அன்பின் நிழல் வீசுதே
இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம்
நிழையோடுதே
வெயில் வரம் தூறுதே
காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா

சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டு ஒன்று
கேளு கண்ணம்மா

முட்கள் கிழிந்தாலுமே
மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே
சுகம் ஆகுமே

வேர்கள் கதை கூறுமே
காலம் இளைப்பாருமே
தெய்வம் கூட இங்கே
பசியாறுமே

இது நாம்தானடி
மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே
போக வழி சொல்லடி

சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டு ஒன்று
கேளு கண்ணம்மா

அலை அலையாக ஆனந்தம்
தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா

மேல் கீழாக
அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டு
சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா

வானைத்தாங்கும்
மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு
செல்லக் கண்ணம்மா

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO