LYRIC

பாடல் : ஒத்தையில நிக்கிறேன்டி
பாடகர் : அந்தோணி தாசன்
படம் : இறைவி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : மணி அமுதவன்

ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி
அடியே அழகே உன் அருமை தெரியாம
அலைஞ்சேன் திரிஞ்சேன் நான் தல கால் புரியாம
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்ச கேட்காம

ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி
கண்ணுமண்ணு தெரியாம கண்டபடி போனேன்
கூட்ட மறந்தே பறந்தேன் கூண்டுக்கிளி ஆனேன்
கண்ண மூடி படுத்தாத்தான் கனவில் உன்னப்பார்ப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வர்ல எப்ப கைய கோர்ப்பேன்
நாய் நரியும் சுத்தும் இந்த பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ நினைச்சாலே துயரம் புள்ள
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்சக்கேட்காம

ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி

எத்தனையே பாதை இங்கே போனதடி முன்னே
முட்டுச்சந்த தேடிப் போயி முட்டிக்கிட்டேன் முன்னே
கொத்துக்கொத்தா பூவையெல்லாம் பார்க்கலையே என் கண்ணே
பூவுன்னு தான் தீய முச்சி சுட்டுக்கிட்டேன் பொண்ணே
சித்தெறும்பு பொந்துக்குள்ள சேகரிச்ச தானியமா
சித்த கத்தி உன் நெனப்ப சேர்த்துவச்சேன் நான் தானம்மா
பட்டேன் புத்தி கெட்டேன் உன் பேச்ச கேட்காம

ஒத்தையில நிக்கிறேன்டி உன் நெனப்பில் கத்துறேன்டி

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO