LYRIC

பாடல் : எந்தப்பக்கம் காணும்போதும்
படம் : தர்மதுரை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடகர் : சின்மயி, ராகுல் நம்பியார்

எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும் போதும்
பாடல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும்
வாழ்வு உண்டு

அட ரோஜாப்பூக்கள் அழுதால்
அது தேனை சிந்தும்
என் ராஜாபையன் நீ அழுதால்
அதில் ஞானம் மிஞ்சும்
சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போதும்
உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும்

எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

எப்போதுமே இன்பம் என்றால்
முன்னேற்றமேது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே

மனசை சலவை செய்ய
ஒரு கண்ணீர் துளி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் ஸ்வாசதீயை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று

நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ…
ஹோ…… ஹோ…… ஹோ……

சந்தர்ப்பமே தீமை செய்தால்
சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி
தாகம் தீராது

தாகம் தீரத்தானோ நீ
தாய்ப்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா
உயிரைத் தருகின்றாய்

உன் உச்சந்தலையை தீண்ட
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால்
போதும் கண்ணே…

ஓ……… ஓ………… ஹோ………

எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

நீ தாவி தாவி தழுவும்போதும்
தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும்
நேர்மை உண்டு

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO