LYRIC
அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சிடுதே அத பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல்லொன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டுத் தொடர்ந்து தொடர்ந்து வருமே
அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சிடுதே அத பாத்து
வெண்ணிலவென்பது வானை நீங்க என்னிடுமோ……
எத்தனை ஜென்மங்கள் ஆனபோதும் மங்கிடுமோ
யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை
கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே
அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சிடுதே அத பாத்து
அன்பு அதை நெஞ்சினில் ஏந்தும்போது
உண்மையிலே………
அத்தனை இன்பமும் சேர்ந்திடாதோ
கைகளிலே…………
தாய் அவள் பாசம்
தந்தையின் நேசம் சேர்ந்தால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனதானே
யாருமே உருவானோம்
மனம் போல் வாழ
உறவே ஊங்சல் கயிராக
அசையும் உயிரே
அழகழகா தொடுகிறதே மல காத்து
அடி மரமும் அசைஞ்சிடுதே அத பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல்லொன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டுத் தொடர்ந்து தொடர்ந்து வருமே
No comments yet